(UTV | கொழும்பு) – மரண தண்டனை கைதியாக விளக்கமறியலில் உள்ள பிரேமலால் ஜயசேகர பாராளுமன்ற உறுப்பினராக சற்றுமுன்னர் சபாநாயகர் முன்னிலையில் பதவி பிரமாணம் செய்து கொண்டார்.
———————————————————–[UPDATE 11.50 AM]
பிரேமலால் ஜயசேகர பாராளுமன்றத்திற்கு [UPDATE]
இன்றைய தினம்(08) பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்காக விளக்கமறியலில் உள்ள பிரேமலால் ஜயசேகர சற்று முன்னர் பாராளுமன்ற வளாகத்திற்கு வருகை தந்துள்ளார்.
அத்துடன் இன்றைய தினம் அவர் பாராளுமன்ற உறுப்பினராக பதவி பிரமாணம் செய்யவுள்ளார்.
—————————————————————-[UPDATE 08.44 AM]
இன்று ஒன்றுகூடவுள்ள பாராளுமன்றம்
(UTV | கொழும்பு) – விளக்கமறியலில் உள்ள பிரேமலால் ஜயசேகர இன்றைய தினம்(08) பாராளுமன்ற உறுப்பினராக பதவி பிரமாணம் செய்துக்கொள்ளவுள்ளார்.
பிரேமலால் ஜயசேகரவுக்கு பாராளுமன்ற கூட்டங்களில் கலந்து கொள்ள மேல்முறையீட்டு நீதிமன்றம் நேற்று(07) அனுமதியளித்துள்ளது.
இதற்கமைய சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையில் இன்று(08) பிற்பகல் 1 மணிக்கு பாராளுமன்றம் ஒன்றுகூடவுள்ளது.
இதேவேளை ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று முற்பகல் 11 மணிக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் ஒன்றுகூடவுள்ளனர்.
இதன்போது 20 ஆவது அரசியலமைப்பு மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது