உள்நாடு

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

(UTV | கொழும்பு)– நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் அடுத்துவரும் இரண்டு நாட்களுக்கு காற்றின் வேகமானது அதிகரித்து காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களின் மணிக்கு 70 கிலோமீற்றர் வேகத்தில் காற்று அதிகரித்த வேகத்தில் வீசக் கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனால், கடற்றொழிலாளர்கள் மிகவும் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மேல், சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் 100 மில்லிமீற்றருக்கு அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகும் என தெரிவிக்க்படப்டுள்ளது.

Related posts

லிட்ரோ இன்றும் இல்லை

இராணுவ தளபதி வெளியிட்ட அறிவித்தல்

அரசுக்கு எதிராக மூன்றாவது நாளாக இன்றும் காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டம்