உலகம்

இந்தியாவில் 40 இலட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு

(UTV | இந்தியா) – இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 40 இலட்சத்தைக் கடந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகின்ற நிலையில், ஒரே நாளில் 86,432 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த சில வாரங்களாக பாதிப்பு எண்ணிக்கை மிக அதிக அளவில் அதிகரித்து வருகின்றது. தினசரி நோய்த்தொற்று 80 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

இந்நிலையில், இன்று காலை இந்திய மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,023,179 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 69,635ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,107,223 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை, இந்தியாவில் கொரோனா தொற்றை கண்டறிவதற்காக நேற்று வரை 4,77,38,491 பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாகவும், நேற்று மட்டும் 10,59,346 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

Related posts

இன்னுமொரு தொற்று நோய்க்கு உலகம் இப்போதே தயாராக வேண்டும்

உண்மைத் தரவுகளை மறைக்கும் ஈரான்

கொரோனா வைரஸ் – இத்தாலியில் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை