கேளிக்கை

ராபர்ட் பேட்டின்ஸனுக்கு கொரோனா

(UTV | இலண்டன்) – மேட் ரீவ்ஸ் (Matt Reeves) இயக்கும் புதிய ‘பேட்மேன்’ படத்தில் ராபர்ட் பேட்டின்ஸன் ‘Robert Pattinson’ நடித்து வருகிறார். கொரோனா அச்சுறுத்தலால் கடந்த மார்ச் மாதம் தொடங்கப்பட்ட படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டு சமீபத்தில் மீண்டும் தொடங்கிய நிலையில் மீளவும் குறித்த படப்பிடிப்பின் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சமீபத்தில் ‘தி பேட்மேன்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. மிகப்பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் இப்படத்தை வார்னர் ப்ரதர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு லண்டன் நகரில் நடைபெற்றது.

இந்நிலையில் பேட்மேனாக நடிக்கும் ராபர்ட் பேட்டின்ஸனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ‘தி பேட்மேன்’ படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வார்னர் ப்ரதர்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

‘தி பேட்மேன்’ படக்குழுவில் உள்ள ஒரு உறுப்பினருக்கு கொவிட் -19 உறுதி செய்யப்பட்டுள்ளது. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக குறித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட அந்த நபர் ராபர்ட் பேட்டின்ஸன் தான் என்ற தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதுமுள்ள பலரும் சமூக வலைதளங்களில் ராபர்ட் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Related posts

விஸ்வரூபம்-2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

‘DOCTOR’ ரிலீஸ் திகதி இதுதானாம்

ஏ.ஆர்.ரகுமானின் எரிச்சலை மாற்றிய மெடினா