உள்நாடு

“MT நிவ் டயமண்ட்” இல் தீப்பரவலில் ஒருவர் காயம் [UPDATE]

(UTV | அம்பாறை) – இலங்கையின் கிழக்கு கடலில் 270 000 மெற்றிக் டன் எண்ணெய் ஏற்றிவந்த கப்பலில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக ஒருவர் காயமடைந்துள்ளதாகவும், தீ மற்றும் எண்ணெய் கசிவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக கடற் பாதுகாப்பு அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

++++++++++++++++++++++++++++  UPDATE 10:48AM

எரிபொருள் தாங்கிய “MT நிவ் டயமண்ட்” இல் தீப்பரவல்

அம்பாறையில் உள்ள ‘சங்கமன்’ கந்த கடற்படையின் 38வது கடல் மைல் தொலைவில், எரிபொருள் நிரப்பு கப்பல் ஒன்று தீப்பிடித்துள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

“MT நிவ் டயமண்ட்” எனும் குறித்த கப்பலில் பணியாற்றிய பணிக்குழுவினரை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படை ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

பனமா நாட்டுக்கு சொந்தமான கப்பலில் இவ்வாறு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, மூன்று கப்பல்கள் அங்கு புறப்பட்டுச் சென்றுள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

 

UTV செய்திகளை உங்கள் கைப்பேசியில் இன்றே செயற்படுத்திக் கொள்ள;
DIALOG,AIRTEL,HUTCH (072/078) பாவனையாளர்கள் REG <space> utv என Type செய்து 77, 000 என்ற இலக்கத்திற்கும், MOBITEL பாவனையாளர்கள் REG <space> utv என Type செய்து 77, 001 என்ற இலக்கத்திற்கும் அனுப்பி இன்றே செயற்படுத்திக் கொள்ளுங்கள்.

Related posts

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பம் தொடர்பில் அறிவித்தல்

ஜனாதிபதி அநுரவுடன் இணைந்து செயற்பட தயார் – சீனா

editor

குறைந்துள்ள டொலரின் பெறுமதி!