உள்நாடு

தனி வீடுகளையே நாம் அமைப்போம் – ஜீவன் தொண்டமான்

(UTV | கொழும்பு) – “மாடிவீடு என்ற போலி கதைகளை நம்ப வேண்டாம். தனி வீடுகளையே நாம் அமைப்போம்” என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் கீழ் இயங்கும் தொண்டமான் கலாச்சார நிலையத்தில் 9 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு நேற்று(30) நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

மாடி வீடு தொடர்பில் தவறான கருத்து பரப்பட்டுவருகின்றது. கூரைக்கு பதிலாக ´கொங்ரீட்´ போட்ட தனி வீடுகளையே நாம் அமைக்கவுள்ளோம். எனவே, போலித்தகவல்களை நம்பவேண்டாம் எனவும் விரைவில் உண்மை என்னவென்பதை உங்களால் நேரில் காணமுடியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கலைஞர்களை நாம் ஊக்குவிக்கவேண்டும் என்பதுடன் அவர்களுக்கான களத்தை அமைத்துக்கொடுத்து உரிய அங்கீகாரம் வழங்கவேண்டும். கலைஞர்கள் வாழ்ந்தால் மட்டுமே கலைகள் வாழும். அவ்வாறு இல்லாவிட்டால் கலைகள் அழிந்துவிடும். எனவே, கலைஞர்களுக்கு அங்கீகாரம் வழங்காமல் கலைகளை பாதுகாக்கமுடியாது. அதனை நாம் நிச்சயம் செய்வோம் எனவும் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

Related posts

கணேமுல்ல சஞ்சீவ கொலை – இஷாராவின் தாயும், சகோதரரும் விளக்கமறியலில்

editor

இலங்கையில் உள்ள நோர்வே தூதரகத்தினை மூடத் தீர்மானம்

காவிங்க பெரேராவுக்கு விளக்கமறியல்