உள்நாடு

சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் கால எல்லை நாளையுடன் நிறைவு

(UTV|கொழும்பு) – கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கால எல்லை நாளையுடன்(31) நிறைவடையவுள்ளது.

பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளமான www.doenets.lk ஊடாக மாணவர்கள் தமது விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

பாடசாலை பரீட்சார்த்திகள் அதிபர் ஊடாகவும் தனியார் பரீட்சார்த்திகள் பரீட்சைகள் திணைக்களத்தின் ஆலோசனைக்கமையவும் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்

விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கால எல்லை ஆகஸ்ட் 21 ஆம் திகதியுடன் நிறைவடையவிருந்த நிலையில், கால எல்லையை ஆகஸ்ட் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்படமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கொட்டகலையில் 10 வீடுகள் கொண்ட குடியிருப்பில் தீ விபத்து

editor

சீரற்ற வானிலை – 134,484 பேர் பாதிப்பு – 3 பேர் பலி

editor

கொழும்பு கறுவா தோட்டம் பகுதியில் உள்ள கட்டடத்தில் பாரிய வெடிப்பு