உள்நாடு

கண்டியில் அதிர்வு – விசேட ஆய்வுகள் முன்னெடுப்பு

(UTV|கண்டி) – கண்டி – தலாத்துஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சில பகுதிகளில் ஏற்பட்ட நில அதிர்வு தொடர்பில் ஆராய்வதற்காக விசேட குழுவினர் சென்றுள்ளதாக புவியியல் ஆராய்ச்சி மற்றும் சுரங்க பணியகம் குறிப்பிட்டுள்ளது.

கண்டி – தலாத்துஓயாவை அண்மித்த சில பகுதிகளில் நேற்றிரவு சிறியளவிலான அதிர்வு ஏற்பட்டுள்ளது.

திகண, அளுத்ஹேன, அம்பக்கோட்டே, ஹாரகம மற்றும் குருதெனிய ஆகிய பகுதிகளிலேயே அதிர்வு பதிவாகியுள்ளது.

எனினும் இதுவொரு நிலநடுக்கம் அல்லவென புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவர் அனுர வல்பொல தெரிவித்தார்.

இது குறித்து மக்கள் அச்சமடைய தேவையில்லை என புவிசரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.

Related posts

விலங்குகள் நல சட்டமூலத்தை பாராளுமன்றில் சமர்ப்பிக்க அனுமதி

இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகள் குழு!

பல்கலைக்கழகங்களது ஆரம்பம் தொடர்பிலான அறிவிப்பு