உள்நாடு

வீசா அனுமதியின்றி நாட்டில் தங்கியிருந்த 13 பேர் கைது

(UTV|கொழும்பு) – சட்ட விரோதமான முறையில் நாட்டில் தங்கியிருந்த வெளிநாட்டு பிரஜைகள் 13 பேர் கல்கிஸ்ஸை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

வீசா அனுமதியின்றி சட்டவிரோதமான முறையில் நாட்டில் தங்கியிருந்த தாய்லாந்து மற்றும் சீன பிரஜைகள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

20 தொடக்கம் 44 வயதுக்கிடையிலான 9 பெண்கள் உட்பட ஆண்கள் நால்வர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

சட்ட விரோதமான முறையில் நாட்டிற்குள் கடத்திவரப்பட்ட சுமார் 10,300 வெளிநாட்டு சிகரட்டுக்கள் என்பன சந்தேக நபர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

சீமெந்து கல் ஒன்றின் விலை 100 ரூபாயாக உயர்வு

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் – யாரும் கட்டுப்பணம் செலுத்தவில்லை.

editor

கல்முனையில் – போஷனை மிகுந்த உணவுகளை சுவையாக தயாரித்து வழங்கும் செயற்றிட்டம் .