வணிகம்

சிசுமக+ ஊடாக பாதுகாப்பான கல்வியை அறிமுகப்படுத்துகிறது Union Assurance

(UTV|கொழும்பு) – முன்னணி காப்புறுதி தீர்வுகளை வழங்கும் நிபுணர்களான Union Assurance, சிசுமக+ஐ அறிமுகப்படுத்துகிறது, இதுவொரு தனித்துவமான பாதுகாப்பு அடிப்படையிலான திட்டமாகும் என்பதுடன் இது சிறுவயது முதல் பல்கலைக்கழகம் வரையிலான தடையற்ற கல்வியை உறுதி செய்வதற்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

சிசுமக+ என்பது, பெற்றோர் ஒரு பிள்ளைக்கு பல்கலைக்கழகம் அல்லது மூன்றாம் நிலைக் கல்விக்காக ஏற்படும் கல்விச் செலவீனங்களையும், உயர் கல்விச் செலவீனங்களையும் தடையின்றி வழங்கவும், மேலும் பெற்றோரின் மறைவு போன்ற துரதிர்ஷ்டவசமான சூழ்நிலையிலும் கூட இதன் நன்மைகளை பெற்றுக் கொள்வதை உறுதி செய்யும் ஒரு காப்புறுதித் திட்டமாகும்.

Union Assuranceஇன் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற சிறப்பு நிகழ்வின் போது இந்த புதிய காப்புறுதித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதுடன், இந்த நிகழ்விற்கு கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கப்பில பெரேரா, ஜோன் கீல்ஸ் குழுமத்தின் தலைவர் கிரிஷான் பாலேந்திரா, Lanka Impact Investing Network (Private) Ltd இன் நிறுவுனர் மற்றும் தலைவர் சந்துல அபேவிக்ரம மற்றும் பிரபல தொழிலதிபர் பாத்திய ஜயகொடி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய Union Assuranceஇன் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜூட் கோமிஸ், கல்விப் பாதுகாப்பு என்பது இலங்கையில் ஒப்பீட்டளவில் புதியதொரு கருத்தாகும், மேலும் சிசுமக+ஐ அறிமுகப்படுத்துவதில் முன்னோடியாக இருப்பதையிட்டு Union Assurance மகிழ்ச்சியடைகிறது. சேமிப்பு மற்றும் முதலீட்டின் கலவையின் மூலம் இந்தத் திட்டம் பிள்ளைகளுக்கு உயர்கல்விக்கான அவர்களின் லட்சியங்களை தீவிரமாக தொடர அத்தியாவசிய ஆதரவை வழங்குவதோடு, அதேசமயம் அதற்காக ஏற்படும் செலவுகள் அதிகரிப்பதை எதிர்க்கும் சாதனமாகவும் இருக்கும். உங்கள் பணம் உங்கள் குழந்தைகளுக்கு மிக முக்கியமாக தேவைப்படும் சந்தர்ப்பத்தில் அது அவர்களிடமே இருக்கும் என்பதற்கான உத்தரவாதத்தினை இதனூடாக அளிக்க முடியும். என அவர் தெரிவித்தார்.

சிசுமக+ கல்வி நிதியத்தின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு ஒரு நிதி கட்டமைப்பை வழங்குவதுடன், மேலும் காப்புறுதி திட்ட காலத்தின் போது அனைத்து காப்பீட்டுத் தொகையை முடித்தவுடன் செலுத்தப்படும் மேலதிக 15% நம்பிக்கை அனுகூலங்கள் மற்றும் பெற்றோர் இறந்தால், 5 மடங்கு உடனடியாக செலுத்துதல் கொள்கையின் முதிர்வு வரை கல்விச் செலவுகளை கவனித்துக் கொள்வதற்கான அடிப்படை வருடாந்தர காப்பீட்டு தொகை மற்றும் நிலையான மாத வருமானத்தையும் வழங்குகிறது.

குறிப்பாக இலங்கை மட்டுமன்றி முழு உலகமும் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இந்த நேரத்தில், பலர் தங்கள் பிள்ளையின் கல்வி அபிலாஷைகளுக்கு வலுவான நிதி அடித்தளத்தை அமைப்பதற்கு போதுமான சேமிப்புக்களை மேற்கொள்வதில சிரமங்களை எதிர்கொள்ள நேரிடலாம். தனியார் வகுப்புக்கள், பாடப் புத்தகங்கள், எழுதுகருவிகள், தங்கும் அறை கட்டணம் மற்றும் போக்குவரத்துச் செலவ ஆகியவற்றினால் அதிகரித்து வரும் செலவுகளைக் கருத்திற் கொண்டு, பெற்றோர்களுக்கும், குடும்பங்களுக்கும் பெரும் கவலையை ஏற்படுத்தும்.

சிசுமக+ என்பது இந்தக் கவலைகளை எளிமையான, செலவு குறைந்த மற்றும் மிக முக்கியமாக பயனுள்ள முறையில் நேரடியாக தீர்க்கக் கூடிய ஒரு திட்டமாகும்.’ என கோமிஸ் மேலும் தெரிவித்தார். குறிப்பாக, உள்ளுர் பல்கலைக்கழகங்களில் தனக்கு பொருத்தமான துறைக்கு ஏற்ற அந்தஸ்து கிடைப்பதில் குறைபாடுகள் உள்ளதனால், வெளிநாடுகளில் உயர்கல்விக்கான செலவு மற்றும் உள்நாட்டில் வெளிநாட்டுடன் இணைக்கப்பட்ட கல்லூரிகள் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களின் செலவினைக் கூட தங்கள் குழந்தைகளின் உயர்கல்விக்கு செலவு செய்ய விரும்பும் பெற்றோர்கள் பெரும் சவால்களை எதிர்கொள்கின்றனர்.

இலங்கையில் உயர்கல்வி புள்ளிவிபரங்களின்படி 15 பிராந்திய பல்கலைக்கழகங்களுக்கு ஆண்டுதோறும் அதிகபட்சம் 25,000 மாணவர்களே அனுமதி பெறுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் மேம்பட்ட நிலை தேர்வுகளில் பல்கலைக்கழக நுழைவுக்கு 220,000 மாணவர்கள் தகுதி பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. 2018ஆம் ஆண்டில், சுமார் 15,000 இலங்கை மாணவர்கள் வெளிநாடுகளிலுள்ள பல்கலைக்கழகங்களில் கல்வியை நாடியதாக கூறப்படுகிறது. எனினும் கணிசமான எண்ணிக்கையிலானவர்கள் உள்நாட்டிலுள்ள வெளிநாடுகளுடன் இணைக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.

வசதி குறைந்த பிள்ளைகளின் தேவைகளை ஏற்றுக் கொள்ளுதல் மற்றும் அவர்களின் கல்வியைத் தொடர்வதற்கு ஏற்படும் சவால்களைக் கருத்திற் கொண்டு Union Assurance மற்றும் மொனராகலையிலுள்ள ளுழுளு சிறுவர் கிராமங்களுக்கு உதவியளிப்பதை உறுதிப்படுத்தியுள்ளதுடன், இலங்கையிலுள்ள செவிப்புலனற்றோர் மற்றும் பார்வையற்றோருக்கான பள்ளிகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்காகவும் ஐந்து புலமைப்பரிசில்களையும் வழங்கியுள்ளது.

Union Assurance Limitedஐ பற்றி

Union Assurance இலங்கையில் மிகவும் விருது பெற்ற ஆயுள் காப்புறுதி நிறுவனங்களில் ஒன்றாகும், இது மூன்று தசாப்தங்களுக்கு மேலாக 18 பில்லியன் ரூபா சந்தை முதலீடுகளைக் கொண்டுள்ளதுடன், ஆயுள் நிதியாக 38 பில்லியனையும் மற்றும் ஜூன் 2020ஆம் ஆண்டு நிலவரப்படி மூலதன போதுமான விகிதம் (CAR) 405% ஆகும். இலங்கையினுடைய கனவை நனவாக்குவதற்காக அமைக்கப்பட்ட Union Assurance இலங்கையர்களின் கல்வி, சுகாதாரம், முதலீடு, பாதுகாப்பு மற்றும் ஓய்வூதியத் தேவைகளை உள்ளடக்கிய ஆயுள் காப்புறுதித் தீர்வுகளை வழங்குகிறது. 70 கிளைகள் மற்றும் 3000 க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட Union Assurance மக்கள், தயாரிப்புகள் மற்றும் செயல்முறைகளில் தொடர்ந்து முதலீடு செய்வதோடு, ஆயுள் காப்புறுதித் துறையில் வளர்ந்து வரும் மாற்றங்களுக்கும் சுறுசுறுப்பாகவும் பதிலளிக்கக் கூடியதாகவும் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கோழி இறைச்சிக்கு தட்டுப்பாடு

பாகிஸ்தான் தூதுவராலய பதில் உயர் ஸ்தானிகர் – நிதி அமைச்சர் இடையே சந்திப்பு

நள்ளிரவு முதல் பெற்றோல் விலையில் மாற்றம்