வணிகம்

அலுமினிய பொருட்களின் இறக்குமதி முற்றாக நிறுத்தப்படும்

(UTV | கொழும்பு) – சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி பிளாஸ்டிக் மற்றும் அலுமினிய பொருட்களின் இறக்குமதி முற்றிலும் நிறுத்தப்படும் என சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் எந்தவொரு பொருளையும் இறக்குமதி செய்ய தடை விதிக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

சுற்றுச்சூழல் அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் மஹிந்த அமரவீர இதனைத் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பொலித்தீன் உற்பத்தி பொருட்களை இறக்குமதி செய்ய தடை

மரக்கறி விநியோகிக்க விசேட வேலைத்திட்டம்

ஊதுபத்தி தயாரிப்பிற்கான ‘மூங்கில் கூறு’ வெளிநாட்டில் இருந்து