உள்நாடு

அனைத்து இனங்கள் – மதங்கள் சமமாக கருதப்படும்

(UTV | கொழும்பு) – அனைத்து இனங்கள் மற்றும் மதங்கள் சமமாக கருதப்படும் மகா சங்கத்தின் ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகளுக்கு மத்தியிலேயே அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வடமேல் மாகாண மகா சங்க கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

குருநாகல் மாவட்ட வேட்பாளராக களமிறங்கிய தனக்கு கடந்த பொதுத் தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெற்றுக் கொள்வதற்கு குருநாகல் மாவட்டத்தின் அனைத்து தொகுதிகளிலுமுள்ள மதகுருமார்கள் மற்றும் பொதுமக்கள் செய்த அர்ப்பணிப்பிற்கு இதன்போது பிரதமர் நன்றி தெரிவித்தார்.

அதேபோன்று நாட்டின் எதிர்கால திட்டங்களை மகா சங்கத்தின் ஆலோசனை மற்றும் அறிவுரையின் பேரில் செயற்படுத்துவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெளிவாகக் கூறியுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.

அனைத்து இனங்களையும் மதங்களையும் சமமாக நடத்துவதிலும், அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள இடத்தை பாதுகாப்பதிலும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

Related posts

இலங்கை வருவோருக்கு இன்று முதல் புதுப்பிக்கப்பட்ட கொவிட் சட்டங்கள்

காஸா சிறுவர் நிதியத்துக்கான நிதி பற்றி ஐ.தே.க வின் வேண்டுகோள் !

இன்றைய நாளுக்கான மின்வெட்டு