உலகம்

கொவிட் 19 – இந்தியா தொடர்ந்தும் மூன்றாம் இடத்தில்

(UTV | இந்தியா) – உலக அளவில் அமெரிக்கா தான் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் இருந்தாலும் கடந்த சில நாட்களாக ஒருநாள் கொரோனா பாதிப்பில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருவதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 70,067 பேர் பாதிப்பு அடைந்துள்ளதாகவும், இந்தியாவில் கொரோனா பாதிப்பால் 24 மணி நேரத்தில் 918 பேர் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.
மேலும் இந்தியாவில் கொரோனாவில் இருந்து இதுவரை 22,79,900 பேர் குணம் அடைந்தனர் என்பதும், இந்தியாவில் கொரோனா பாதிப்புடன் 7,06,138 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் 2,32,72,847 பேர் இதுவரை பாதிப்பு என்றும், உலகம் முழுவதும் கொரோனாவால் இதுவரை 8,05,907 பேர் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கொரோனா தொற்றால் இதுவரை 56 லட்சம் பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.

அமெரிக்காவை அடுத்து பிரேசில் நாட்டில் 3,582,698 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், 114,277 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பிரித்தானியா பிரதமருக்கும் கொரோனா வைரஸ் தொற்று

54 ஆவது ஜெனிவா கூட்டத்தொடர் செப்டெம்பர் 11 இல் ஆரம்பம்!

பூமியை நோக்கி வரும் கல் – நாசா எச்சரிக்கை