கிசு கிசு

நாடு இருளில் மூழ்கக் காரணம் இதுதானாம்

(UTV | கொழும்பு) – கெரவலபிட்டிய மின் உற்பத்தி நிலைய பராமறிப்பின் போது மின்சார சபை ஊழியர் ஒருவர் இழைத்த சிறிய தவறே நாடு முழுதும் மின்சாரம் தடைப்பட்டமைக்கு காரணம் என இலங்கை மின்சார சபையின் மேலதிக பொது முகாமையாளர் கலாநிதி சுசந்த பெரேரா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்;

´கெரவலபிட்டியவின் கிறீட் உப மின் நிலையத்தின் மின் பராமறிப்பின் போதே இந்த நிலைமை ஏற்பட்டது. அந்த பகுதியின் இறுதி பகுதியில் பழுதுபார்க்கும் வேலையை நிறைவு செய்து கொண்டிருந்த மின்சார அதிகாரி ஒருவரின் சிறிய தவறே மின்சாரம் தடைப்பட்டமைக்கு காரணம். அதனால் நுரைச்சோலை லக்விஜய அனல் மின் நிலையத்தில் பயன்படுத்தப்பட்ட மூன்று மின்பிறப்பாக்கிகள் செயலிழந்தன. அவை மூன்றும் ஒரே தடவையில் செயலிழக்கவில்லை மாறாக வெவ்வேறு கட்டங்களில் அவை தடைப்பட்டன.

இது அன்றைய தினம் நண்பகல் 12.30 க்கு ஏற்பட்டது. அப்போது 21,000 – 22,000 மெகாவோட் மின்சாரம் நுகர்வுக்கு தேவைப்படும். சிலவேளை அது அதிகரிக்கவும் கூடும். அப்போது கெரவலபிட்டிய உப மின் நிலையத்தின் ஊடாக 135 மெகாவோட் மின்சாரம் மின் கட்டமைப்பில் இணைக்கப்பட்டிருந்தது.

அவ்வாறு நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் செயற்பாடு நிறுத்தப்பட்டால் அதை மீண்டும் வழமைக்கு கொண்டுவர வேண்டும். அவ்வாறு மீள் இணைப்பின் போது கொதிப்பான் கட்டமைப்பின் வெப்பம் உயர்வடையும். அவ்வாறு சூடாகிய கொதிப்பான் குளிரடைய சாதாரணமாக மூன்றரை நாட்கள் எடுக்கும்.´ எனவும் தெரிவித்திருந்தார்.

Related posts

கொரோனா வைரஸ் தொற்றினை கண்டறியும் மோப்ப நாய்கள்

வன ஜீவராசிகளின் உயிருக்கு கேள்விக்குறி [PHOTOS]

மஹேலவின் அதிரடி சீற்றம்…