உள்நாடு

நாளை 05 மணித்தியால நீர் வெட்டு

(UTV | காலி) – அம்பலாங்கொடை மற்றும் பலப்பிட்டிய ஆகிய பிரதேசங்களை அண்மித்த பகுதிகளில் நாளை(22) காலை 10 மணி முதல் பிற்பகல் 03 மணி வரையான 05 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

பத்தேகம நீர் சுத்திகரிப்பு நிலைய திருத்தப் பணிகள் காரணமாக இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக அந்த சபை மேலும் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, அம்பலாங்கொடை, ஹிக்கடுவ, பலப்பிட்டிய, பெந்தொட்ட, எல்பிட்டிய, படபொல மற்றும் பத்தேகம அகிய பகுதிகளுக்கு இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

சதி மூலம் ஆட்சிக்கு வந்ததை கோட்டாவின் நூல் மறந்து விட்டதா – வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் கேள்வி

தங்கத்தின் விலை வீழ்ச்சி

மாற்றமடையாத டிஜிட்டல் பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்படும் – கனக ஹேரத்.