(UTV|இந்தோனேசியா)- இந்தோனேசியாவில் 6.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
கிழக்கு இந்தோனேசியாவின் தென்கிழக்கு பகுதியான Sulawesi யில் 600 கிலோ மீற்றருக்கும் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படாத நிலையில் நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.