உள்நாடு

பாராளுமன்ற தெரிவுக்குழுவில் 12 உறுப்பினர்கள் நியமனம்

(UTV | கொழும்பு) – 9 ஆவது பாராளுமன்றத்தின் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்ற தெரிவுக்குழு இன்று நியமிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தின் இரண்டாம் நாள் அமர்வு இன்று காலை ஆரம்பமானது.

இதன்போது சபாநாயகர் தலைமையிலான பாராளுமன்ற தெரிவுக்குழுவில் 12 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, பாராளுமன்ற உறுப்பினர்களான நிமல் சிறிபால டி சில்வா, தினேஷ் குணவர்தன, செல்வம் அடைக்கலநாதன், டக்ளஸ் தேவாநந்தா, ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, டலஸ் அழகப்பெரும, விமல் வீரவங்ச, பிரசன்ன ரணதுங்க, லக்‌ஷ்மன் கிரியெல்ல, கயந்த கருணாதிலக்க, ரவூப் ஹக்கீம், விஜித ஹேரத், ஆகியோர்தெரிவுக்குழுவில் பெயரிடப்பட்டுள்ளனர்.

Related posts

புதிய நிவாரண கொடுப்பனவு!

உதயங்க வீரதுங்க பிணையில் விடுதலை

editor

மஹியங்கனையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் வைத்தியசாலையில்

editor