உலகம்

100 ஆண்டுகளில் இல்லாத அளவில் கடும் வெப்பம்

(UTV | அமெரிக்க) – அமெரிக்கா  தெற்கு கலிபோர்னியாவில் உள்ள டெத் வேலியின் வெப்பநிலை 100 ஆண்டுகளில் மிக உயர்ந்த உலக வெப்பநிலையை பதிவு செய்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க தேசிய வானிலை அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், டெத் பள்ளத்தாக்கில் 130 டிகிரி பாரன்ஹீட் (54.4 டிகிரி செல்சியஸ்) ஆக வெப்பநிலை உயர்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

“இது 1913 ஜூலை முதல் அதிகாரப்பூர்வமாக சரிபார்க்கப்பட்ட மிக அதிகபட்ச வெப்பநிலையாகும்.” எனத் தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் 16, 2020 அன்று, ஃபர்னஸ் க்ரீக்கில் உள்ள அமெரிக்க தேசிய வானிலை அமைப்பின் தானியங்கி வானிலை நிலையத்தில் 130 °F (54.4 °C) வெப்பநிலை பதிவு செய்யப்பட்டது. இது உறுதிப்படுத்தப்பட்டால், 100 ஆண்டுகளுக்குப் பிறகு மிக அதிகபட்ச வெப்பநிலையாக இது இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பிரான்ஸின் மூத்த இராணுவ அதிகாரி கைது

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

பூட்டானில் முதல் முறையாக முழுமையான ஊரடங்கு