உள்நாடுசூடான செய்திகள் 1

மின்சாரத்தினை சிக்கனமாக பாவிக்குமாறு கோரிக்கை

(UTV | கொழும்பு) – மின் உற்பத்தி நிலையமான நுரைச்சோலை அனல் மின்நிலையத்தினால் தேசிய மின்னோட்ட கட்டமைப்புக்கு வழங்கப்படும் 810 மெகாவோட் மின்சாரம் தடைப்பட்டுள்ளதால் சில பிரதேசங்களில் திடீர் மின்தடை ஏற்படலாம் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் இலங்கை மின்சார சபையின் பணிப்பாளர், ஊடக பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவிக்கையில்;

“.. நாடளாவிய ரீதியில் நேற்று(17) ஏற்பட்ட திடீர் மின்சார தொழில்நுட்ப கோளாறினை தொடர்ந்து நுரைச்சோலை லக்விஜய அனல் மின் நிலையமானது செயலிழந்துள்ளது.

நுரைச்சோலை மின்நிலையத்தில் நேற்று உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரம் தேசிய மின்சுற்றோட்ட கட்டமைப்புடன் இணைக்கப்படாததால் ஏற்பட்ட தொழிநுட்ப கோளாறு காரணமாக இந்த மின்நிலையத்தில் மின் உற்பத்தி தடைப்பட்டுள்ளது.

இதனால் நுரைச்சோலை அனல் மின்நிலையத்தினால் தேசிய மின்னோட்ட கட்டமைப்புக்கு வழங்கப்படும் 810 மெகாவோட் மின்சாரம் தடைப்பட்டுள்ளது. இதனால் சில பிரதேசங்களில் திடீர் மின்தடை ஏற்படக்கூடும். ஆதலால் மின்சாரத்தினை சிக்கனமாக பாவிக்குமாறும் மக்களுடன் கோரிக்கை  விடுக்கப்பட்டுள்ளது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சிறைச்சாலை கைதிகளை பார்வையிட அனுமதி

யோஷித ராஜபக்ஷ மீண்டும் கடற்படை சேவையில்

பொதுத் தேர்தலில் சஜித்தின் தலைமைக்கு ஜா.ஹெல உறுமய ஆதரவு