உள்நாடு

ஒரு தொகை போலி நாணயத்தாள்களுடன் மூவர் கைது

(UTV | கொழும்பு) – சட்டவிரோத நாணயத்தாள்களுடன் 03 பேர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் முல்லேரியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 100 கோடி ரூபா பெறுமதியான 5,000 ரூபா நாணயத்தாள்கள் அடங்கிய 125 பணக்கட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.

இதன்போது சந்தேக நபர்களின் காரொன்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளுக்காக சந்தேக நபர்கள் முல்லேரிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

வுஹானில் உள்ள இலங்கை மாணவர்கள் வந்த சிறப்பு விமானம் மத்தளைக்கு

விளையாட்டு செயலிகள் ஊடாக பணமோசடிகள்!

புதிய பாராளுமன்ற உறுப்பினர்களை பதிவு செய்யும் நடவடிக்கை நாளை

editor