கேளிக்கை

ரஜினி – கமல் படம் குறித்து லோகேஷ் விளக்கம்

(UTV|இந்தியா) – கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கவிருந்த படத்தின் நிலை குறித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விளக்கம் அளித்துள்ளார்.

மாநகரம் படம் மூலம் அறிமுகமான இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கார்த்தியை வைத்து கைதி படத்தை இயக்கினார். இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது.

அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்த லோகேஷ் விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கி முடித்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக இப்படம் வெளியாகும் திகதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. .

இதனிடையே லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் ரஜினிகாந்தை இயக்கவிருப்பதாக சில மாதங்களுக்கு முன் தகவல் வெளியானது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

இந்நிலையில், ரஜினி படத்தின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து சமீபத்திய பேட்டியில் லோகேஷ் கனகராஜ் பேசியிருக்கிறார். அவர் கூறியதாவது: “இப்போதைக்கு நான் இந்த படம் பற்றி எந்த தகவலையும் சொல்ல முடியாது. தயாரிப்பு நிறுவனம் தான் இந்தப்படம் பற்றிய முடிவை எடுக்க வேண்டும். ஒப்பந்தங்கள் அனைத்தும் கையெழுத்தான பிறகு அவர்கள் தான் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள்” என கூறியிருக்கிறார்.

Related posts

பிரபல பாலிவுட் நடிகர் ரிஷி கபூர் உயிரிழந்தார்

காட்டு நாய்கள் 14 உடன் மோதும் ஆண்ட்ரியா

பிறந்தநாளில் புகை பிடிக்கும் காட்சியை வெளியிட்ட ஸ்ரேயா