உள்நாடு

போதைப்பொருள் கடத்தல்காரர்களின் 550 வலையமைப்புகள்

(UTV|கொழும்பு)- மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்படும் போதைப்பொருள் கடத்தல்காரர்களின் 550 இற்கும் மேற்பட்ட வலையமைப்புகள் கண்டறியப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

குறித்த இந்த வலையமைப்புகளுடன் தொடர்புபட்டுள்ளவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை போதைப்பொருள் மோசடியாளர்கள் தொடர்ந்தும் கைது செய்யும் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஜாலிய சேனாரட்ன குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் போதைப்பொருள் மோசடி விவகாரத்தில் பெண்கள் அதிகளவில் ஈடுபட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 653

கொழும்பு, கண்டி பிரதான வீதியில் வாகன நெரிசல் : அஜித்

ரஷ்ய அரச செய்தி நிறுவனத்திடமிருந்தான அறிவிப்பு