உள்நாடு

மேலும் 494 பேர் நாடு திரும்பினர்

(UTVகொழும்பு)- கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த 494 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

மூன்று நாடுகளில் இருந்து நான்கு விமானங்கள் ஊடாக இவர்கள் மத்தல மற்றும் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையங்களை வந்தடைந்துள்ளனர்

அதனடிப்படையில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து 322 பேரும் கட்டாரில் இருந்து 22 பேரும் ஓமான் நாட்டிலிருந்து 150 பேரும் நாடு திரும்பியுள்ளனர்.

இவ்வாறு நாடு திரும்பிய அனைவருக்கும் பீ.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு அவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு அனுப்பிவைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

கசினோவை திறப்பதற்கு முன் ஒரு ஒழுங்குமுறை நிறுவனத்தை நிறுவவும்

இன்றும் சுழற்சி முறையில் 3 மணி நேர மின்வெட்டு

“புதிதாக மூவாயிரம் தாதியர்களை சேவையில் இணைக்க தீர்மானம் “