உள்நாடு

பட்டதாரிகள் அரச சேவைக்கு – திகதியில் மாற்றம் [UPDATE]

(UTV | கொழும்பு) – பொதுத் தேர்தல் காரணமாக இடைநிறுத்தப்பட்ட, 1 இலட்சத்து 50 ஆயிரம் வேலை வாய்ப்பு திட்டத்தை உடனடியாக செயற்படுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.


ஜனாதிபதி ஊடக பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

அதன்படி, வேலையற்ற பட்டதாரிகளின் பெயர் பட்டியல் எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை (16) ஜனாதிபதி செயலகத்தின் இணையத்தளத்தில் வௌியிடப்படவுள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு நியமனக் கடிதம் அனுப்பும் செயற்பாடு எதிர்வரும் திங்கட்கிழமை (17) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

நியமனம் பெற்றவர்கள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 02 ஆம் திகதி தனக்குரிய பிரதேச செயலகத்திற்கு வர வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தகுதி பெற்ற பட்டதாரிகளின் பெயர், பட்டியலில் உள்ளடங்காவிடின் ஜனாதிபதி செயலகத்திற்கு அழைத்து வினவ முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்ட குறைந்த வருமானம் ஈட்டுபவர்களுக்கான 1 இலட்சம் வேலை வாய்ப்பு வழங்கும் பணிகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 02 ஆம் திகதி முதல் அதற்காக ஸ்தாபிக்கப்பட்டுள்ள செயலணியினால் செயற்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Related posts

கேகாலை மாவட்ட சகல பாடசாலைகளுக்கும் பூட்டு

வாகன இறக்குமதி குறித்து புதிய தகவல்.

20 ஆவது திருத்தம் – நீதிமன்ற தீர்ப்பு பாராளுமன்றில் சமர்ப்பிப்பு [UPDATE]