விளையாட்டு

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களுக்கு 2 முறை கொரோனா பரிசோதனை

(UTV|இந்தியா ) – சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் பயிற்சி முகாமில் கலந்து கொள்ள வருகை தரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களுக்கு 2 முறை கொரோனா பரிசோதனை நடத்த அணி நிர்வாகம் தீர்மானித்துள்ளது.

துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய இடங்களில் 13-வது ஐ.பி.எல். போட்டி செப்டம்பர் 19 ஆம் திகதி முதல் நவம்பர் 10 ஆம் திகதி வரை நடத்த ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

இந்த போட்டியில் பங்கேற்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அங்கம் வகிக்கும் இந்திய வீரர்களுக்கு சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் பயிற்சி முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

வீரர்கள் தங்களை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டு தான் சென்னைக்கு வருவார்கள். இங்கு மேலும் இரண்டு முறை அவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தோனியின் மகளுக்கு மிரட்டல் விடுத்த சிறுவன் கைது

அவுஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளருக்கு கொரோனா

முதலாவது போட்டியில் 104 ஓட்டங்களால் இங்கிலாந்து வெற்றியை ருசித்தது