(UTV|இந்தியா) – தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக இருக்கும் மகேஷ் பாபு விடுத்த சவாலை நடிகர் விஜய் ஏற்று இருக்கிறார்.
சமீபத்தில் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் மகேஷ் பாபு சவால் ஒன்று விடுத்தார். மேலும் இந்த சவாலை செய்யுமாறு நடிகர் விஜய், தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர், நடிகை சுருதிஹாசன் ஆகியோரை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
மகேஷ் பாபுவின் சவாலை விஜய் ஏற்பாரா என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தனர்.
இந்நிலையில் நடிகர் விஜய், மகேஷ்பாபுவின் சவாலை ஏற்று மரம் நட்டிருக்கிறார். மேலும் சமூக வலைத்தளத்தில் மகேஷ்பாபு இது உங்களுக்காக என்று பதிவு செய்திருக்கிறார்.