உள்நாடு

கட்சியின் தலைமை தொடர்பில் செயற்குழுவில் அறிவிக்கவும்

(UTV | கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய தலைவர் ஒருவரின் தேவை தொடர்பில் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளதாக குறித்த கட்சி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிரேஷ்ட தலைவர்களுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் ரணில் விக்கிரமசிங்க இதனை தெரிவித்திருக்கின்றார்.

இது தொடர்பில் கலந்துரையாடி புதிய தலைமைத்துவம் தொடர்பில் எதிர்வரும் செயற்குழுக் கூட்டத்தில் அறிவிக்குமாறு ரணில் கூறியுள்ளார்.

கட்சியை முழுமையாக மறுசீரமைத்து வெற்றிப்பாதைக்கு கொண்டு செல்வதற்கான திட்டமொன்று வகுக்கப்பட வேண்டும் எனவும் ரணில் விக்ரமசிங்க நேற்றைய கலந்துரையாடலில் சுட்டிக்காட்டியதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊடக அறிக்கை

Related posts

மினுவாங்கொடை – அல் அமானில் வெற்றிகரமாக நடைபெற்ற சியன ஊடக வட்டத்தின் ஊடக செயலமர்வு

கறுப்பு பூஞ்சை தொற்றுக்குள்ளான கொரோனா நோயாளர்கள் அடையாளம்

இராணுவப் பயிற்சி : 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும்