உள்நாடு

லிந்துலை தீ விபத்து – 24 தொழிலாளர் குடியிருப்புகள் தீக்கிரை

(UTV|லிந்துலை ) – லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பம்பரக்கலை மத்திய பிரிவில் நேற்றிரவு 10 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 24 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

தீ விபத்து காரணமாக லயன் தொகுதியில் அமைந்திருந்த வீடுகள் முற்றாக சேதமடைந்ததுடன் 24 குடும்பங்களை சேர்ந்த 70 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதனையடுத்து லிந்துலை பொலிஸார் மற்றும் பொது மக்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்ததுடன், சுமார் 3 மணித்தியாலயத்தின் பிறகு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.

இத் தீ விபத்து மின்சார ஒழுக்கு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவிப்பதுடன் இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

கொவிட் 19 குறித்த செய்திகள் கண்காணிக்கப்படும்

குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்

வேலைவாய்ப்பு அற்ற 50,000 பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு