உள்நாடு

மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் 2 வான் கதவுகள் திறப்பு

(UTV|ஹற்றன் ) – மலையகத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சில நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

இதன்படி, மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

இதேவேளை ஹற்றன் நுவரெலியா பிரதான வீதியில் அருகாமையில் உள்ள சென்கிளேயர் நீர்விழ்ச்சி மற்றும் டெவன் நீர் விழ்ச்சியின் நீர்மட்டம் அதிகரித்து காணப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகின்றன.

மலையகத்தில் உள்ள காசல்ரீ நீர்தேக்கம் மற்றும் மெளசக்கலை, கெனியன் ஆகிய நீர்த்தேக்கங்களிற்கான நீர்வரத்து அதிகரித்துக் காணப்படுவதால், குறித்த நீர்த் தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்து காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மேலும் 16 பேர் குணமடைந்தனர்

மேலும் 51 பேருக்கு கொரோனா

முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கான அறிவிப்பு