உள்நாடு

தேர்தல் வரலாற்றில் மஹிந்த சாதனை

(UTV | கொழும்பு) – இலங்கை தேர்தல் வரலாற்றில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்ற வேட்பாளர் என்ற சாதனையை ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ படைத்துள்ளார்.

குருணாகலை மாவட்டத்தில் போட்டியிட்ட மஹிந்த 527,364 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

2015 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட ரணில் விக்கிரமசிங்க 500,566 விருப்பு வாக்குகளைப் பெற்றார்.

பொதுத்தேர்தலில் வேட்பாளர் ஒருவர் பெற்ற அதிகூடிய விருப்பு வாக்குகளாக இது பதிவானது.

1994ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் சந்திரிக்கா குமாரதுங்க 464,588 வாக்குகளைப் பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் கால எல்லை நாளையுடன் நிறைவு

 முறைகேடான வர்த்தகர்கள் தொடர்பான முறைப்பாடுகளை அறிவிக்க தொலைபேசி இலக்கம் அறிமுகம்

அரிசி விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை