உள்நாடு

நாடு பூராகவும் 71 வீதமான வாக்குகள் பதிவு

(UTV|கொழும்பு) – 2020 பொதுத் தேர்தலில் நாடளாவிய ரீதியில் 71% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றத்திற்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் மாலை 5 மணிக்கு நிறைவடைந்துள்ளன.

நாடு முழுவதிலும் அமைக்கப்பட்டிருந்த 12,885 மத்திய நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட 16,263,885 வாக்காளர்கள் இதில் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றிருந்தனர்.

வாக்களிப்பு வீதங்கள் பின்வருமாறு:
கொழும்பு மாவட்டம்- 67%
களுத்துறை மாவட்டம்- 70%
கண்டி மாவட்டம்- 72%
மாத்தளை மாவட்டம்- 72%
நுவரெலியா மாவட்டம்- 75%
காலி மாவட்டம் – 70%
மாத்தறை மாவட்டம்- 71%
ஹம்பாந்தோட்டை மாவட்டம்- 76%
யாழ்ப்பாணம் மாவட்டம்- 57%
வன்னி மாவட்டம்- 73%
மட்டக்களப்பு மாவட்டம்- 76%
திஹாமடுல்ல மாவட்டம்- 73%
திருகோணமலை மாவட்டம்- 73%
குருநாகல் மாவட்டம்- 60%
புத்தளம் மாவட்டம்- 64%
அனுராதபுரம் மாவட்டம்- 70%
பொலன்னறுவை மாவட்டம்- 72%
பதுளை மாவட்டம்- 74%
மொனராகலை மாவட்டம்- 75%
இரத்தினபுரி மாவட்டம்- 71%
கேகாலை மாவட்டம்- 71%
கிளிநொச்சி மாவட்டம்- 71.52%
மன்னார் மாவட்டம்- 79.49%
வவுனியா மாவட்டம்- 74%
முல்லைத்தீவு மாவட்டம்- 76.25%
கம்பஹா மாவட்டம்- 63%

Related posts

அசுத்தமான குளியலறை, சிறிய சிறைக்கூண்டு பூச்சிச் தொல்லை சிறையில் அவஸ்தைப்படும் இம்ரான்கான்!

ரயில்வே பணிப்புறக்கணிப்பினால் ரயில் சேவைகள் பாதிப்பு

ஐ.தே.கட்சியின் செயற்குழு கூட்டம் ஒத்திவைப்பு