(UTV | கொழும்பு) – 22 தேர்தல் மாவட்டங்களில் உள்ள 12,985 வாக்குச் சாவடிகளில் இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமான 2020 பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நிறைவடைந்தது.
வாக்குப் பெட்டிகள் தயார்செய்யப்பட்டுவருவதோடு பொலிஸாரின் பாதுகாப்புடன் அவை வாக்கெண்ணும் மத்திய நிலையங்களுக்கு வாகனங்களில் எடுத்துச் செல்லப்படவுள்ளன.
நாடு முழுவதிலும் 70 சதவீதமான வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதற்கமைய இன்றைய தினம் 5 மணியுடன் நிறைவடைந்த வாக்கு பதிவுகளுக்கு அமைய,
கொழும்பு 68%
கம்பஹா – 68%
களுத்துறை – 65 %
திகாமடுல்லை – 73%
கண்டி – 72%
அம்பாந்தோட்டை – 76%
மொணராகலை – 73%
கேகாலை – 70%
குருநாகல் – 65%
இரத்தினபுரி 72%
மாத்தளை – 72%
பதுளை – 65%
மட்டக்களப்பு – 76%
புத்தளம் – 65%
காலி – 70%
மாத்தறை – 70%
நுவரெலியா – 75%
வன்னி – 74%
திருகோணமலை – 74%
யாழ்ப்பாணம் – 67%
அநுராதபுரம் – 70%
பொலன்னறுவை -72 %