(UTV|கொழும்பு) – தமிழகத்தில் எதிர்வரும் ஓகஸ்ட் 31-ம் திகதி வரை ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் அமுல்படுத்தப்பட்ட பொதுமுடக்கம் பல்வேறு தளர்வுகளுடன் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஜூலை 31ம் திகதியுடன் பொது முடக்கம் முடிவடைய இருந்த நிலையில், அதே கட்டுப்பாடுகளுடன், மீண்டும் ஆகஸ்ட் 31 வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ ரயில், மின்சார ரயில், பேருந்துப் போக்குவரத்து, திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்களுக்கு விதிக்கப்பட்ட தடை தொடருமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் 5,864 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கொரோனா தொற்றால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 2,39,978 ஆக உயர்ந்துள்ளது.