உள்நாடு

தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 165 பேர் வீடுகளுக்கு

(UTV|கொழும்பு)- வன்னி விமானப்படை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தலை நிறைவு செய்த மேலும் 165 பேர் வௌியேறியுள்ளதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.

இதேவேளை, இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்ட தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் இருந்து 555 பேர் தமது தனிமைப்படுத்தல் செயற்பாட்டை நிறைவு செய்து வீடு திரும்பவுள்ளனர்.

பெரியகாடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து 118 பேரும், பூவரசன்குளம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து 193 பேரும், கஹகொல்ல தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து 176 பேரும் மற்றும் புனானை தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து 68 பேரும் இவ்வாறு அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.

இதுவரையான காலப்பகுதியில் 27,494 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து வீடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கொழும்பு வரும் சாரதிகளுக்கான விசேட அறிவிப்பு

ஒரு நாளில் நாடே ஸ்தம்பிதம்

ரஷ்ய எண்ணெயை கடன் வாங்குவதற்கான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம்