உள்நாடு

கொழும்பை அபிவிருத்தி செய்ய திட்டம்

(UTV|கொழும்பு)- கொழும்பு மாவட்ட மக்கள் முகங்கொடுக்கும் முக்கிய பிரச்சினைகளை இனங்கண்டு முறையான திட்டத்துடன் கொழும்பை அபிவிருத்தி செய்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவில் பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் வெற்றியை உறுதிசெய்யும் வகையில் நேற்று(28) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கொழும்பு மாவட்டத்தில் சுற்றுப் பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்த வேளையில் இதனை தெரிவித்தார்.

வீடில்லா பிரச்சினை, கழிவுகளை அகற்றுவதில் உள்ள கஷ்டங்கள், வாழும் இடங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்படுதல், மாவட்ட மக்கள் முகங்கொடுக்கும் முக்கியப் பிரச்சினைகளாகும். இவற்றுக்கு தீர்வுகளை வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்

வீட்டு உறுதிப்பத்திரங்கள் கிடைக்காமை சேறிகளுக்கு மாற்றீடாக வீடுகளை பெற்றுக்கொள்ளுதல் மற்றும் வெள்ளத்தினை கட்டுப்படுத்துவதற்கு தீர்வாக கடவத்தை, வெள்ளவத்தை வாவிவழி பாதையை விரிவுபடுத்தல் ஆகிய கோரிக்கைகள் அபேட்சகர் தனசிறி அமரதுங்க தெஹிவலை நகர சபைக்கு அருகில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில் பங்குபற்றிய ஜனாதிபதி அவர்களிடம் முன்வைக்கப்பட்டன.

Related posts

யாழ்.மாவட்டத்திற்கான புதிய பிரதிப் பொலிஸ்மா அதிபர் பதவியேற்பு!

நேற்று கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் கடற்படையினர்

தேங்காய் எண்ணெய் போத்தல் கட்டுப்பாட்டு விலைக்கு