உள்நாடுசூடான செய்திகள் 1

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு

(UTV|கொழும்பு)- நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2,810 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

புதிதாக ஐந்து பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்டிருந்த 04 பேருக்கும் சேனாபுர புனர்வாழ்வு நிலையத்தை சேர்ந்த கைதி ஒருவருக்குமே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.,

இதேவேளை, நாட்டில் இதுவரை 2296 பேர் பூரணமாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, தற்போதைய நிலையில் 503 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

எல்.பி கேஸ் மீள் ஏற்றுமதி நிலையம் ஹம்பாந்தோட்டையில்…

தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளுக்கு இடையில் விசேட கலந்துரையாடல்

பாடசாலைகளில் சிற்றுண்டிச்சாலைகளை மீள திறக்க அனுமதி