(UTV|கொழும்பு) – பேராதனை – கம்பளை வீதியின் கெலிஓயா கரமட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெலம்பொடை பகுதியைச் சேர்ந்த 53 மற்றும் 54 வயதான தம்பதியினரும் கெலிஓயாவைச் சேர்ந்த 54 வயதான ஒருவரும் சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கெலிஓய நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியில் நடந்து சென்ற பாதசாரி ஒருவர் மீது மோதி குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இதனை தொடர்ந்து, குறித்த முச்சக்கரவண்டி வீதியில் நிறுத்தப்பட்டிருந்த காருடன் மோதி குடை சாய்ந்துள்ளது.
இந்த விபத்தில், மோட்டார்சைக்கிள் ஓட்டுனர், பாதசாரி மற்றும் முச்சக்கரவண்டியில் பயணித்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து, முச்சக்கரவண்டியில் பயணித்த இருவரும் பாதசாரியும் உயிரிழந்துள்ளனர்.