(UTV | கொழும்பு) – எதிர்வரும் பொதுத் தேர்தலில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக வாக்குச் சாவடிகளை அமைப்பதில் சிரமங்களை எதிர்கொள்ள நேரிடுவதால் அதனை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.
தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு வாக்களிப்பதற்கான சிறப்பு வாக்கெடுப்பு எதிர்வரும் 31ம் திகதியை தேர்தல் ஆணையகம் முன்னர் ஒதுக்கியிருந்தது.
அதன்படி தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் வாக்குப்பதிவு நடத்துவதற்கும் அனைத்து நபர்களின் வாக்குரிமையும் பாதுகாக்கப்படுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்படும் என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில், 2020 பாராளுமன்றத் தேர்தல் ஆகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.