உள்நாடுசூடான செய்திகள் 1

கொவிட் 19 – தொடர்ந்தும் 659 பேர் சிகிச்சையில்

(UTV | கொழும்பு) – நாட்டில் நேற்று(24) 11 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தை சேர்ந்த 9 கைதிகளும், அங்கு தொற்றுறுதியான ஒருவருடன் தொடர்பை பேணிய தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவருக்கும். பிரித்தானியாவில் இருந்து நாடு திரும்பிய ஒருவருக்குமே இவ்வாறு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நட்டில் இதுவரையில் கொவிட்-19 தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 2,764 ஆக உயர்வடைந்துள்ளது.

இந்நிலையில் கொவிட்-19 தொற்றினால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,௦94 ஆக உயர்வடைந்துள்ளது.

சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 659 ஆக உயர்வடைந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

கொரோனா கொத்தணிகளின் அதிகரிப்பு : ஊரடங்கு தொடர்பிலான முக்கிய அறிவித்தல்

ஊரடங்கு சட்டத்தை மீறிய 10 பேர் கைது

பிளவுபடாத பிரிக்கமுடியாத ஒருமித்த நாட்டிற்குள்ளேயே தீர்வினை எதிரிபார்க்கிறோம்