உள்நாடு

சாதாரண தர – உயர்தர மாணவர்களுக்கான அறிவித்தல்

(UTV|கொழும்பு)- எதிர்வரும் திங்கட்கிழமை 27 ஆம் திகதி தொடக்கம் தரம் 11, 12 மற்றும் 13 ஆம் தர மாணவர்களுக்காக பாடசாலைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, பாடசாலைகள் காலை 7.30 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு பிற்பகல் 3.30 மணிக்கு நிறைவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

ஏனைய மாணவர்களுக்கு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி பாடசாலை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கவுள்ளது.

இதேவேளை, பொது தேர்தலுக்கு பாடசாலைகளை தயார்ப்படுத்துவது தொடர்பில் விழிப்புணர்வுகளை வழங்குவதற்கு சகல பாடசாலை அதிபர் மற்றும் பிரதி அதிபர்கள் எதிர்வரும் ஜூலை 28 ,29, 30, 31 ஆம் திகதிகள் பாடசாலையில் தங்கியிருக்க வேண்டும் என கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், குறித்த காலப்பகுதியில் பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு உதவி தேர்தல் ஆணையாளர்களுடன் கலந்துரையாடி தேர்தல் நடவடிக்கைக்காக பாடசாலைகளில் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சு மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகிய ஜெரோம் பெர்னாண்டோ!

அற்புதமான விண்கல் மழை – இன்றும் நாளையும் காண முடியும்

editor

சபுகஸ்கந்தயில் 23 கிலோ ஹெரோயின் மீட்பு