உள்நாடுசூடான செய்திகள் 1

IDH வைத்தியசாலையில் இருந்து தப்பிச்சென்ற நபருக்கு கொரோனா உறுதி [UPDATE]

(UTV|கொழும்பு)- முல்லேரியா IDH மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளர் ஒருவர் இன்று அதிகாலை வைத்தியசாலையில் இருந்து தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்ற குறித்த நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதை பொருளுக்கு அடிமையான குறித்த நபர் உடல் உபாதை காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இவ்வாறு தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த நபர் தொடர்பில் தகவல் தெரிந்தால் பொலிஸாருக்கு உடன் தகவல் வழங்குமாறும் பொதுமக்களிடம் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதன்படி, குறித்த நபர் தொடர்பான தகவல்களை 119 அல்லது 071 85 91 017 மற்றும் 071 85 92 290 அல்லது 071 85 91 864 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பினை ஏற்படுத்தி அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related posts

கட்சி வேறுபாடின்றி சகலரும் தமது கடமைகளை அர்ப்பணிப்புடன் நிறைவேற்ற வேண்டும்

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு

நாட்டிலிருந்து வெளியேறினார் பசில் – வீடியோ

editor