உள்நாடு

கெஸ்பேவ ஹோட்டல் உரிமையாளர் கொலை – 2 பேர் கைது

(UTV|கொழும்பு)- பிலியந்தலை – கெஸ்பேவ பிரதேசத்தில் ஹோட்டல் ஒன்றின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மிரிஹான விசேட குற்ற விசாரணை பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் இந்த சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் இருந்து தங்க நகைகள் மற்றும் மாணிக்ககற்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 7ஆம் திகதி பிலியந்தலை – கெஸ்பேவ பிரதேசத்தில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றின் உரிமையாளர் இனந்தெரியாத சிலரால் கொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ரயில்வே ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்

ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு கைப்பேசிகளை கொண்டு செல்ல தடை

தேர்தல்கள் ஆணைக்குழு நாளை கூடுகிறது