(UTV|கொழும்பு) – கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டில் புதிய கொரோனா தொற்றாளர்கள் எவரும் அடையாளம் காணப்படவில்லை என தேசிய தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 2730 ஆக உள்ளது
மேலும் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் தொகையும் 2,048 ஆக உயர்வடைந்துள்ளதுடன், 671 கொரோனா தொற்று நோயாளிகள் தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்,