(UTV|கொழும்பு) – குருணாகல் புராதன கட்டடம் சேதமாக்கப்பட்டமை தொடர்பிலான விசாரணை அறிக்கையை பிரதமரிடம் கையளிப்பது தாமதமாகும் என தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
13ஆம் இராசதானிக்குச் சொந்தமான இரண்டாம் புவனேகுபாகு மன்னனின் அரச மண்டபம் உடைக்கப் பட்டமை தொடர்பில் இதுவரையில் எவ்வித உரிய நடவடிக்கைகளும் எடுக்கப்பட வில்லை இது தொடர்பாக ஜனாதிபதி, பிரதமர் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என ஓமல்பே சோபித தேரர் இது தொடர்பில் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.