உள்நாடு

தபால் மூல வாக்களிப்பு – 4ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று

(UTV| கொழும்பு) – பொதுத் தேர்தலின் தபால் மூல வாக்களிப்பிற்கான நான்காம் நாள் இன்று(16) இடம்பெறுகின்றது.

பாதுகாப்பு பிரிவின் ஊழியர்கள் இன்று மற்றும் நாளைய தினங்களில் தமது தபால் மூல வாக்குகளை பதிவு செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த நாட்களில் தபால் மூலம் வாக்களிக்க முடியாத அரச ஊழியர்கள் எதிர்வரும் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் மாவட்ட செயலகங்களில் தமது வாக்குகளை பதிவு செய்வதற்கான சந்தர்ப்பமளிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Related posts

அனர்த்த நிலைமை குறித்து அறிவிக்க விசேட தொலைபேசி இல.

தடுப்பு முகாம்களில் இருந்து 42 பேர் வீட்டுக்கு அனுப்பிவைப்பு

நாளை சஜித்தின் கூட்டணி அங்குரார்ப்பணம்: தமிழ்-முஸ்லிம்கள் கட்சிகள் புறக்கணிப்பு