உலகம்

உலக சுகாதார நிறுவனம் விடுத்துள்ள எச்சரிக்கை

(UTV|கொழும்பு) – உலகின் சில நாடுகள் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளாவிட்டால் கொரோனா தொற்று மேலும், மேலும் மோசமாகும் என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் வைத்தியர் டெட்ரோஸ் ஆதனோம் கெப்ரியேசஸ் எச்சரித்துள்ளார்.

இந்த தொற்றினைக் குறைப்பதற்கான நிரூபிக்கப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளாத நாடுகளில் அபாயகரமான அளவில் வைரஸ் தொற்று அதிகரித்துக்கொண்டு செல்கின்றன. பல நாடுகள் தவறான பாதையில் செல்கின்றன என்றும் ஜெனீவாவில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த வைரஸ் மக்களின் முதல் எதிரியாக இருக்கிறது. இந்நிலையில், பல அரசுகளின் மற்றும் மக்களின் நடவடிக்கை இதைப் பிரதிபலிப்பதாக இல்லை” என்று அவர் கூறியுள்ளார்.

மேலும், அடிப்படையான விஷயங்களைப் பின்பற்றாவிட்டால், இந்த தொற்று மேலும் மேலும், மோசமாகும் என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் வைத்தியர் டெட்ரோஸ் ஆதனோம் கெப்ரியேசஸ் எச்சரித்துள்ளார்.

Related posts

ஆப்கானிஸ்தான் மக்களுக்கு உதவ இந்தியா தயார்

ஈரான் ஜனாதிபதியின் மரணம்: இலங்கை ஆழ்ந்த அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளது – ரணில்

இனவெறிக்கு நமது மௌனம் உடந்தையாக இருக்கிறது