உலகம்

உலக அளவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 5.75 இலட்சத்தை கடந்தது

(UTV|கொழும்பு) – உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 575,545 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் தற்போது உலகின் 215 நாடுகளுக்கு பரவியுள்ள நிலையில், பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றினால் 13,238,121 பாதிக்கப்பட்டுள்ளதுடன்,
பலியானோர் எண்ணிக்கை 5.75 லட்சத்தையும் தாண்டியுள்ளது.

கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 58,881 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதுடன், கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி 7,698,371 பேர் குணமடைந்துள்ளனர்.

அமெரிக்காவிலேயே அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அங்கு 3,479,483 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் 138,247ஆக காணப்படுகிறது.

Related posts

கொரோனாவை தொடர்ந்து நிமோனியா தொடர்பில் WHO ஆராய்வு

டிக்டாக் மீதான தடையை நீக்க அனுமதி

WTO-வின் முதல் பெண் தலைவராக நிகோசி நியமனம்