உள்நாடு

வாக்காளர் அட்டைகள் இன்று முதல் விநியோகம்

(UTV|கொழும்பு) – எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கைகள் இன்று(13) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சுகாதார நடைமுறைகளை பின்பற்றி வாக்காளர்களின் வீடுகளுக்கே வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படும் எனவும் இந்த நடவடிக்கைகள் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படுமென பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உரிய காலப்பகுதியில் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் கிடைக்கப் பெறாதவர்கள், தாம் வசிக்கும் பகுதியிலுள்ள தபால் நிலையத்திற்கு சென்று ஆள் அடையாளத்தை உறுதிசெய்து அவற்றை பெற்றுக் கொள்ள முடியுமென பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க குறிப்பிட்டுள்ளார்.

Related posts

குவைத் மன்னர் மறைவுக்கு இரங்கல்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரேசில் ஜனாதிபதியுடன் சந்திப்பு!

கிழக்கு ஆளுநர் இணைப்பாளர்களை நியமிப்பது சட்டவிரோதம் : தேர்தல் ஆணைக்குழு