உள்நாடு

உனவட்டுன புகையிரத நிலையத்திற்கு பூட்டு

(UTV|கொழும்பு) – உனவட்டுன புகையிரத நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த புகையிரத நிலைய பொறுப்பதிகாரி கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த காரணத்தினால் குறித்த புகையிரதம் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பொறுப்பதிகாரி பி.சீ.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதாகவும், பரிசோதனைகளில் அவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் உணவட்டுன பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் குறித்த புகையிரத நிலைய பொறுப்பதிகாரி 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

உனவட்டுன புகையிரத நிலையத்தில் கிருமி நீக்க நடவடிக்கைகள் இடம்பெற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

ஈஸ்டர் தாக்குதல் : அறிக்கையின் பிரதி ஒன்றை வழங்குமாறு கோரிக்கை

மசகு எண்ணெய் விலையில் மீண்டும் உயர்வு

கடவுச்சீட்டுகளுக்கான கட்டணம் உயர்வு!