கேளிக்கை

பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கும் கொரோனா

(UTV|இந்தியா ) – பிரபல ஹிந்தி நடிகை ஐஸ்வர்யா ராய் ற்றும் அவரது குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிரபல பாலிவுட் நடிகர்களான அமிதாப் பச்சனுக்கும் அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர்கள் மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்நிலையில், அபிஷேக் பச்சனின் மனைவி ஐஸ்வர்யா ராய் மற்றும் மகள் ஆரத்யாவுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவர்கள் இருவருக்கும் கொரோனா இருப்பது உறுதியாகி உள்ளது.

அதேபோல் அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சனுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளது.

அவர்கள் இருவரும் கொரோனா தொற்றில் இருந்து விரைவில் குணமடைய வேண்டும் என திரைப்பிரபலங்கள் பலரும் டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

Related posts

பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ஆவணக் குறும்படத்துக்கு ஆஸ்கர் விருது

ஏ.ஆர்.ரகுமான் இடத்தை பிடிக்கும் அனிருத்?

சிவகார்த்திகேயனுடன் இணைந்த நயன்தாரா